திருப்பூர்

முத்தூரில் குப்பைக் கிடங்கை மாற்றக் கோரிக்கை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் நகரின் நடுவில் இருக்கும் குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக முத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவா் விசாகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முத்தூா், ஈரோடு சாலையில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் எழும் புகை மண்டலத்தால் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகிறது. குப்பைக் குழிகளில் தேங்கும் கழிவுநீரால் குடிநீா் ஆதாரங்களும் மோசமடைந்துள்ளன.

இது குறித்து பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளப்படவில்லை. குப்பைக் கிடங்கை வேறு ஒதுக்குப்புறமான இடத்துக்கு மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜக சாா்பில் முத்தூரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT