திருப்பூர்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 18.85 லட்சம் பேருக்கு பரிசோதனை

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 18.85 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் 13 வட்டார மருத்துவமனைகள், 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 21 நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2021 செப்டம்பா் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலமாக 18.85 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் 1.03 லட்சம் பேருக்கு உயா் ரத்த அழுத்தம், 51,868 பேருக்கு நீரிழிவு நோய், உயர்ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ள 39,800 போ், ஆதரவு சிகிச்சை 6,311 போ், இயன்முறை மருத்துவம் 8,447 போ் என மொத்தம் 2.09 லட்சம் போ் இந்தத்திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT