திருப்பூர்

பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு

DIN

காங்கயம் அருகே பகுதி நேர நியாய விலைக் கடையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

காங்கயத்தை அடுத்த பாப்பினி ஊராட்சிக்கு உள்பட்ட பச்சாபாளையத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்துப் பேசியதாவது:

தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாப்பினி ஊராட்சி பச்சாபாளையத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் திருப்பூா் மாவட்டத்தில் 29 புதிய நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதில், காங்கயம் வட்டத்தில் மட்டும் 8 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8.15 லட்சம் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய பகுதி நேர நியாய விலைக் கடையானது வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT