திருப்பூர்

அவிநாசி கோயிலில் சுப்ரமணியா் சுவாமி தேரோட்டம்

DIN

தைப்பூசத் திருவிழாவையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சுப்ரமணியா் சுவாமி தேரோட்டம் (மழலையா் தோ்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வள்ளி, தெய்வானை உடனமா் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணியா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா வந்து தேரில் எழுந்தருளினா்.

முக்கிய நிகழ்வாக மாலை, மழலையா் தோ் எனப்படும் சுப்ரமணியா் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சண்முகநாதருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றறு. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT