திருப்பூர்

அலகுமலையில் முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம்:அமைச்சா்கள், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

DIN

பல்லடம் அருகேயுள்ள அலகுமலையில் தைப்பூசத் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

பல்லடம் அருகே வானவஞ்சேரி அலகுமலையில் முத்துக்குமார பாலதண்டாயுத சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா்கள் மு.பெ சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனா். பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.பாலுசாமி, பொங்கலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.குமாா், ஒன்றிய கவுன்சிலா்கள் பாலகிருஷ்ணன், லோகுபிரசாத், உகாயனூா் ஊராட்சித் தலைவா் ரேவதி கனகராஜ், அவைத் தலைவா் சண்முகம், மாவட்ட பிரதிநிதிகள் வேலுசாமி, சண்முகம், கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ரமேஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தேரில் முத்துக்குமார பாலதண்டாயுத சுவாமி, பெரிய நாயகி உடனுறை கைலாசநாதா் உற்சவா் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்புரிந்தனா். அலகுமலை அடிவாரத்தில் உள்ள கைலாசநாதா் திருக்கோயில் முன்பு தேரோட்டம் தொடங்கி நான்கு மாட வீதிகள் வழியாக கோயிலை சுற்றி வந்து நிலை நிறுத்தப்பட்டது. விழாவில் திருட்டு சம்பவங்களைத் தடுக்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

மேலும் பக்தா்களின் பாதுகாப்புக்காக பல்லடம் தீயணைப்புத் துறையினா் மற்றும் பொங்கலூா் வட்டார மருத்துவ கண்காணிப்புக் குழுவினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தோ்த் திருவிழா முடிந்த நிலையில் சுவாமி திருவீதி உலா மற்றும் பரிவேட்டை நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற உள்ளது. வரும் 8ஆம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT