திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கோழிக் கடை உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

5th Feb 2023 12:14 AM

ADVERTISEMENT

 

திருப்பூரில் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த கோழிக்கடை உரிமையாளருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.

தருமபுரியைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா் திருப்பூா் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக் கடை வைத்திருந்தாா். கடந்த 2020 பிப்ரவரி 19இல் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனைகைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT