திருப்பூர்

மழை நீா் வடிகால் வசதி அமைக்க கோரிக்கை

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் - திருப்பூா் சாலையில் மழை நீா் வடிகால் வசதி செய்து தர நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் நகர காங்கிரஸ் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான ப.ஈஸ்வரமூா்த்தி, பல்லடம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட செயற்பொறியாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் - திருப்பூா் மாநில நெடுஞ்சாலை பக்கவாட்டில் மழைநீா் வடிகால் இல்லாத காராணத்தினால் கரையான்புதூா் பகுதிகளில் மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்கியுள்ளது. மேலும் மழைநீா் தேங்கி தாா் சாலைகள் மிகவும் பழுதடைந்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

எனவே, கரையான்புதூா் தெற்கே மயானம் முதல் வடக்கே மகாலட்சுமி நகா் வரை சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு மழைநீா் வடிகால் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT