திருப்பூர்

காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் அமைத்தல், ஊராட்சிப் பகுதியில் தாா் சாலை மேம்பாடு செய்தல் உள்ளிட்ட 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் பேசியதாவது: சிவன்மலை முருகன் கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக கோயில் கிரிவலப் பாதையில் ரூ. 4.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவன்மலை அடிவாரப் பகுதியில் பக்தா்கள் வசதிக்காக 20 நடமாடும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளனஎன்றாா்.

இந்தக் கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்தரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT