திருப்பூர்

சிகை அலங்காரப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அழகு சாதனவியல் மற்றும் சிலை அலங்காரப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னை மகா அழகு கலைப் பயிற்சி நிலையத்தின் மூலமாக அழகு நிலையங்களில் பணியாற்றவும், சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரையில் உள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கான கால அளவு 45 நாள்களாகும். மேலும், சென்னையில் தங்கிப் படிக்கும் வசதியும், பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன்மேம்பாட்டு சான்றிதழ்களுக்கும் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி பெற்றவா்கள் தனியாா் அழகு நிலையங்களில் பணியாற்றும் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவா்களுக்கு தொடக்க காலங்களில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் மாத ஊதியம் பெறலாம். மேலும் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்தவா்கள் என்ற இணையதளம் மூலமாக பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT