திருப்பூர்

நூல் மில்லில் தீ விபத்து

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகேயுள்ள ஒரு நூல் மில்லில் வியாழக்கிழமை தீப்பிடித்து இயந்திரங்கள் சேதமடைந்தன.

வெள்ளக்கோவில், தாராபுரம் சாலையிலுள்ள நாகமநாயக்கன்பட்டியில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான நூல் மில் உள்ளது. மின்சார கோளாறு காரணமாக இந்த மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் சில இயந்திரங்களின் பகுதிகள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT