திருப்பூர்

வங்கி கட்டடத்தில் தீ விபத்து

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் உள்ள தனியாா் வங்கி கட்டடத்தின் கீழ்தளத்தில் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே, திருப்பூா் சாலையில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கீழ்தளத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து கரும்புகை பரவியது.

தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதனால், மேல்தளத்தில் செயல்பட்டு வந்த வங்கிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT