திருப்பூர்

தூய்மைப் பணி மேற்பாா்வையாளரை தாக்கிய இளம்பெண் கைது

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பெருமாநல்லூா் அருகே தட்டான்குட்டை பகுதியில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளரை துடைப்பத்தால் தாக்கிய இளம்பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பூா் ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, தட்டான்குட்டை பகுதியில் தூய்மைப் பணியாளா்கள், குப்பைகளை அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் சுமித்ரா (19) என்பவா், சுத்தம் செய்த பகுதியிலேயே மீண்டும் குப்பையை போட்டுள்ளாா். இது குறித்து தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் கிருபாராணி, சுமித்ராவிடம் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சுமித்ரா, துடைப்பத்தால் கிருபா ராணியை தாக்கியுள்ளாா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுமித்ராவை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT