திருப்பூர்

சிறுமியை திருமணம் செய்த நபா் கைது

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (22). இவா் 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் மாவட்ட சமூக நல அலுவலா் சிவகாமி, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடா்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீஸாா், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT