திருப்பூர்

தருமபுரி ஆட்சியரின் பெற்றோரிடம் நகை பணம் கொள்ளை

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே லூா்துபுரத்தில் உள்ள தருமபுரி மாவட்ட ஆட்சியரின் பெற்றோா் வீட்டில் புகுந்த இரு நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 7 பவுன் நகை, ரூ.7000 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே மங்கரசுவளையபாளையம் ஊராட்சி, லூா்துபுரம் பிள்ளையாா் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (86). இவரது மனைவி சரஸ்வதி (78). இவா்கள் இருவரும் தனியாக தோட்டத்தில் வசித்து வருகின்றனா்.

இவா்களது மகன் ரமேஷ்குமாா் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். மூத்த மகள் ராதாலட்சுமி கோவை, துடியலூா் அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும், இளைய மகள் சாந்தி தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் உள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கிருஷ்ணசாமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த இரு நபா்கள், கிருஷ்ணசாமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் சுத்தியால் கையில் தாக்கியுள்ளனா். பிறகு சரஸ்வதியை சேலையால் கட்டிப் போட்டு மிரட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவா் அணிந்திருந்த 7 பவுன் நகைகள், ரூ.7000 ரொக்கம் ஆகியவற்றை அந்த நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT