திருப்பூர்

மூலனூரில் ரூ. 72.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 72.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 264 விவசாயிகள் மொத்தம் 921 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 9 வணிகா்கள் இவற்றை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ. 8,650 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,850 . கடந்த வார சராசரி விலை ரூ. 7,900. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 72.54 லட்சம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT