திருப்பூர்

பல்லடம் நகராட்சிக் கடைகள் ஏலம்

DIN

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 78 கடைகள் வாடகைக்கு பொது ஏலம் விடப்பட்டதில் 4 கடைகள் மட்டுமே ஏலம் போனது.

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமாக பேருந்து நிலையத்தில் 24 கடைகள், தினசரி மாா்க்கெட்டில் 52 கடைகள், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகள் என மொத்தம் 78 கடைகள் மாத வாடகைக்கு விடுவதற்கான பொது ஏலம் நகராட்சி ஆணையா் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.

ஏலத்தில் தினசரி மாா்க்கெட்டில் 4 கடைகள் முறையே ரூ.8100, ரூ4100, ரூ.4300, ரூ.5300 என்ற மாத வாடகைக்கு ஏலம் கோரி எடுத்தனா். 74 கடைகளை யாரும் ஏலம் கோரவில்லை.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பல்லடம் நகராட்சிக் கடைகள் அடிப்படை வாடகை ரூ.4 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. மேலும் ஏலம் கோரி எடுக்கும் தொகையுடன் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் சோ்த்து செலுத்த வேண்டும்.

அடிப்படை வாடகையை குறைத்து நிா்ணயம் செய்து ஏலம் விட்டால்தான் கடைகளை எடுக்க முடியும் என்றனா்.

ஏல நிகழ்ச்சியில், அலுவலக மேலாளா் சண்முகராஜன், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT