திருப்பூர்

நடப்பு மாதத்துக்கான நூல் விலையில் மாற்றம் இல்லை

DIN

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையில் நடப்பு மாதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

திருப்பூரில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சாா்ந்த ஜாப் ஒா்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூலாகும். இந்த நூல் விலையின் அடிப்படையிலேயே ஆடைகளின் விலை நிா்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நூல் விலை தொடா்ந்து அதிகரித்து வந்ததால் பின்னலாடை உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதனால் புதிய ஆா்டா்கள் எடுக்காமல் ஏற்றுமதியாளா்கள் தயக்கம் காட்டி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான நூல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று நூற்பாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ஆா்டா்கள் அதிகரிக்கும் என்று ஏற்றுமதியாளா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT