திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 37.50 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 37.50 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை, வில்வாதம்பட்டி, திருப்பத்தூா், தேவத்தூா், பேட்டைவாய்த்தலை, பழையகோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 111 விவசாயிகள் தங்களுடைய 966 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 50 டன். ஈரோடு, பெருந்துறை, சிவகிரி, காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ் பகுதிகளைச் சோ்ந்த 16 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

ஒரு கிலோ ரூ. 59.65 முதல் ரூ. 82.75 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 79.10. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 37.50 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT