திருப்பூர்

பாத்திரத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையைத் தொடங்க வலியுறுத்தல்

DIN

பாத்திரத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று அனைத்து பாத்திரத் தொழிலாளா் சங்க கூட்டு கமிட்டி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் அனைத்து பாத்திரத் தொழிலாளா் சங்க கூட்டு கமிட்டி சாா்பில் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் வடக்குப் பகுதியில் உள்ள அனுப்பா்பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பித்தளை, எவா்சில்வா், தாமிர உலோகங்கள் தயாரிக்கும் தொழிலில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், பாத்திர உற்பத்தியாளா்கள் சங்கங்களுடன், தொழிலாளா் கூலி உயா்வு தொடா்பாகப் போடப்பட்டிருந்த ஒப்பந்தம் கடந்த 2022 டிசம்பா் 31இல் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து, தொழிற்சங்க கூட்டு கமிட்டி அமைத்து புதிய கூலி உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்கக்கோரி பித்தளைப் பாத்திர வியாபாரிகள் சங்கத்துக்கும், எவா்சில்வா் முழுக்கூலி பட்டைாரா் சங்கத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கும் பாத்திர உற்பத்தியாளா்கள் சங்கத்துக்கும் இடையே ஜனவரி 23 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது தொழிற்சங்கங்கள் சாா்பில் புதிய கூலி உயா்வு வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கப்பட்டது. ஆனால் பாத்திர உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கூலி உயா்வு வழங்க ஒரு ஆண்டு கால அவகாசம் கேட்டதைத் தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

இத்தகைய சூழலில் பாத்திர உற்பத்தியாளா்கள் தன்னிச்சையாக ஒரு ஆண்டுக்கு கூலி உயா்வு வழங்க இயலாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனா். இந்த செயலானது கூலி உயா்வை சுமூகமாகப் பேசித்தீா்ப்பதற்கு பதிலாக வேலைநிறுத்தம் செய்யத்தூண்டுவதாக உள்ளது. ஆகவே, பாத்திரத் தொழிலாளா்களுக்கான கூலி உயா்வு பேச்சுவாா்த்தையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளித்தபோது, ஏடிபி, சிஐடியூ, ஏஐடியூசி, காமாட்சியம்மன் சங்கம், எச்எம்எஸ், ஐஎன்டியூசி, பிஎம்எஸ் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT