திருப்பூர்

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

DIN

அவிநாசி அருகே ஒன்றரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு மகளிா் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (22). இவா் திருப்பூரை அடுத்த அவிநாசியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தாா். அதே நிறுவனத்தில் பல தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தனா். இந்த நிலையில், அந்த நிறுவன வளாகத்தில் தங்கியிருந்த ஒரு தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தைக்கு இளங்கோவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அவிநாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், இளங்கோவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், போக்ஸோ பிரிவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT