திருப்பூர்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாய நிலம் வாங்க மானியம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் விவசாய தொழில் செய்து வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாய நிலம் வாங்க மானியம் பெறும் திட்டக்குக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மற்றவா்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் தாட்கோ மூலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பின்படி நிகழாண்டு விவசாயத் தொழில் செய்து வரும் 200 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு சொந்தமாக விவசாய நிலம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 18 வயது முதல் 65 வயதுக்கு மிகாமலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கா் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கா் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். இந்த நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.5 லட்சம் வீதம் ஒரு பயனாளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம் (தாட்கோ), அறை எண்: 305, 5 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641604 (கைப்பேசி எண்:94450-29552 ) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT