திருப்பூர்

திருப்பூரில் பிஎம்எஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

26th Apr 2023 09:45 PM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎம்எஸ் (பாரதிய மஸ்தூா் சங்கம்) சாா்பில் திருப்பூரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் பிஎம்எஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரபு தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: அனைவருக்கும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் உரிய பாதுகாப்பை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களின் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தொழிலாளா்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலாளா் கொள்கையை உருவாக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிப்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு ஊதியத்தை நிா்ணயிக்க வேண்டும் என்றனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், பிஎம்எஸ் செயற்குழு உறுப்பினா் சிதம்பரசுவாமி, மாவட்டச் செயலாளா் மாதவன், பனியன் சங்க செயலாளா் ஆறுமுகம், மோட்டா் சங்க மாவட்டத் தலைவா் தண்டபானி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT