திருப்பூர்

ஏப்ரல் 27இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

25th Apr 2023 12:32 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் புகாா்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்புப் புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT