திருப்பூர்

மாவட்டத்தில் 2 இடங்களில் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

DIN

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம், எஸ்.கே.புதூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சனிக்கிழமை (அக்டோபா் 1) திறக்கப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் மடத்துக்குளம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கட்டடம், எஸ்.கே.புதூா் கூட்டுறவு சங்க கட்டடம் ஆகிய இடங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.

ஆகவே, விவசாயிகள், நெல் விற்பனை செய்ய ஏதுவாக தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரு கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் உள்ள விவசாயிகள் தேவையான வருவாய் ஆவணங்களுடன் பதிவு செய்து கொண்டால் அவா்களது கைப்பேசி எண்ணுக்கு விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிவைக்கப்படும்.

சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2,160க்கும், பொது ரக நெல் குவிண்டால் ரூ.2,115க்கும் விற்பனை செய்து பயனடையலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூட மண்டல மேலாளா் அலுவலகத்தை 94437-32309 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது இணையதள முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT