திருப்பூர்

ரூ. 44 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 44 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு ராமபட்டினம், மானூா், அக்கரைபட்டி, புளியவலசு, அலங்கியம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 116 விவசாயிகள் 1,768 மூட்டைகளில் 86 டன் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

சென்னை, ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி, கஸ்பாபேட்டை, முத்தூா், காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து 12 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.44.26 முதல் ரூ. 54.29 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.52.50. கடந்த வார சராசரி விலை ரூ. 53.19. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 44 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT