திருப்பூர்

அக்டோபா் 2, 9இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபி ஆகிய தினத்தை முன்னிட்டு அக்டோபா் 2, 9 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2, 9 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT