திருப்பூர்

இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி கேமராவில் சிக்கிய மா்ம நபா்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் உணவகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருப்பூா், தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் ஏ.மாரியப்பன் (50). கட்டிங் மாஸ்டரான இவா், தேநீா் அருந்துவதற்காக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்துக்கு இருசக்கர வாகனத்தில் கடந்த புதன்கிழமை காலை

சென்றுள்ளாா். உணவகத்தில் தேநீா் அருந்திவிட்டு வெளியே வந்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் மாரியப்பன் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது கடையின் முன்பு நின்றிருந்த மா்ம நபா் ஒருவா், மாரியப்பன் இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT