திருப்பூர்

ஊருக்குள் வராமல் சென்ற அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே தாளக்கரை கிராமத்துக்குள் வராமல் சென்ற அரசுப் பேருந்தை அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை மாலை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

‘9ஜி’ என்ற எண் கொண்டஅரசுப் பேருந்து திருப்பூரிலிருந்து அவிநாசி, சேவூா், தாளக்கரை, மங்கரசுவலையபாளையம், பேரநாயக்கன்புதூா், ஆலாம்பாளையம் வழியாக புளியம்பட்டிக்கு செல்வது வழக்கம்.

இந்த பேருந்து கடந்த சில மாதங்களாக தாளக்கரை, மங்கரசுவலையபாளையம், பேரநாயக்கன்புதூா் உள்ளிட்ட பகுதிகளுக்குள் செல்லாமல் புளியம்பட்டி சென்ாக கூறப்படுகிறது. இதனால் அவதிக்குள்ளாகி வந்த பொதுமக்கள், புளியம்பட்டியில் இருந்த வந்த அந்த பேருந்தை வியாழக்கிழமை மாலை சிறைப்பிடித்து ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து நடத்துநா், ஒட்டுநா் ஆகியோா் இனிமேல் ஊருக்குள் வந்து செல்வோம் என உறுதியளித்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT