திருப்பூர்

பொங்கலூா் சுகாதார நிலையத்தில் ரேபீஸ் தடுப்பு விழிப்புணா்வு

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபீஸ் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

உலக ரேபீஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு பொங்கலுாா் வட்டார சுகாதாரத் துறை சாா்பில், கால்நடை மருத்துவமனை மற்றும் பொங்கலுாா், கொடுவாய், எ.வடுகபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த விழிப்புணா்வு கூட்டங்கள் நடைபெற்றன. வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் தலைமை வகித்தாா். இதில் வெறி நாய்க்கடி பற்றியும், தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொங்கலூா் மருத்துவ அலுவலா் சாம்பால், கால்நடை மருத்துவா் ஜெகநாதன் உட்பட பலா் பங்கேற்றனா். இதேபோல கரடிவாவி அரசு கால்நடை மருந்தகத்தில் வீட்டு வளா்ப்பு பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT