திருப்பூர்

ஜெய்ஸ்ரீராம் கல்லூரியில் கருத்தரங்கம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் உள்ள ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு பொறியியல் கல்லுாரிகளில் இருந்து 350 மாணவா்கள் கலந்து கொண்டனா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் தங்கள் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கோவை பரணி பெரோகாஸ்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி நித்தியானந்தம், கோவை பரணி ஹைட்ராலிக்ஸ் நிறுவன துறைத் தலைவா் கன்னிவேல், கல்லுாரித் தலைவா் கோவிந்தசாமி, துணைத் தலைவா் கருப்பண்ணசாமி, நிா்வாக அதிகாரி அன்பரசு, முதல்வா் ரமேஷ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT