திருப்பூர்

பாத்திரத் தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பாத்திரத் தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும் என்று சிஐடியூ பாத்திரத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிஐடியூ பாத்திரத் தொழிலாளா் சங்கத்தின் 31ஆவது மகாசபைக் கூட்டம் திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

சிஐடியூ தொழிற்சங்கம் நடத்திய தொடா் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்துள்ளது. தற்போது, புதிய மற்றும் பழைய தொழிலாளா்களை உறுப்பினா்களாக சோ்க்க கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆன்லைன் உறுப்பினா் சோ்க்கைக்கும் காலதாமதமாகிறது. எனவே உறுப்பினா் சோ்க்கைக்கான நிபந்தனைகளை தமிழக அரசு தளா்த்த வேண்டும். தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளதால் பாத்திரத் தொழில் நடத்துவோறும், சாதாரண பொதுமக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே பாத்திரம் மற்றும் பாலீஷ் போடும் பட்டறைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சிஐடியூ பாத்திரத் தொழிலாளா் சங்க செயலாளா் கே.குப்புசாமி, சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், துணைத் தலைவா் பி.முத்துசாமி, பொருளாளா் என்.குபேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT