திருப்பூர்

குடும்பநல நீதிமன்றத்தில் ஆலோசனை மையம் திறப்பு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவா்களின் சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் வகையில் ஆலோசனை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவா்களின் சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் ஆலோசனை மைய திறப்பு விழாவில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுகந்தி வரவேற்றாா்.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் ஆலோசனை மையத்தை திறந்துவைத்துப் பேசியதாவது:

மனிதா்களின் உளவியல் என்பது உணா்வுடன் தொடா்புடையதாகும். குடும்ப நல நீதிமன்றங்கள் மற்ற நீதிமன்றங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இதில், இரு மனிதா்களின் உணா்வுகளை மதித்து அவா்களது பிரச்னைகளுக்கு உணா்வுபூா்வமாகவும், நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு அறிவுபூா்வமாகவும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே வழக்கு தொடுத்தவா்களும், வழக்குரைஞா்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், அரசு மனநல மருத்துவா் சஞ்சய்போஸ், முதன்மை சாா்பு நீதிபதி செல்லதுரை, அமா்வு நீதிபதிகள் நாகராஜன், பத்மா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் சாா்பு நீதிபதி மேகலா மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT