திருப்பூர்

உடுமலை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 48ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பேராசிரியா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்தாா். விழாவில் பாரதியாா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க.முருகவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

இந்தியாவின் வளா்ச்சிக்கு படித்த இளைஞா்களின் பங்களிப்பு பெரும் துணையாகவும், இன்றியமையாத தேவையாகவும் உள்ளது.

இளைய தலைமுறையினருக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதனைப் போலவே சவால்களும் நிறைந்துள்ளன. முந்தைய தலைமுறையினருக்கு கிடைத்திடாத வசதிகளும் வாய்ப்புகளும் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு கிடைத்து வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

பட்டமளிப்பு விழாவில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த இளநிலை மற்றும் முதுநிலை என மொத்தம் 858 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. வேதியியல் துறைத் தலைவா் பேராசிரியா் ம.சிவகுமாா் மற்றும் பேராசிரியா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT