திருப்பூர்

திருப்பூரில் பிஎஃப்ஐ அமைப்பினா் 76 போ் கைது

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினா் 76 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், அந்த அமைப்பின் நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி 250 பேரைக் கைது செய்தனா். இதையடுத்து, பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.

இந்த நிலையில், பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து திருப்பூா்- காங்கயம் சாலை சிடிசி காா்னரில் அந்த அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

இதேபோல, திருப்பூா் ரயில் நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஃப்ஐ அமைப்பைச் சோ்ந்த 22 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT