திருப்பூர்

காங்கயம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைப்பு

DIN

காங்கயம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 1,790 கிராமங்களுக்கும், 6 பேரூராட்சிகளுக்கும், 3 நகராட்சிகளுக்கும் நீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊதியூா் செல்லும் பிரதான காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் காங்கயம்-தாராபுரம் செல்லும் வழியில் வட்டமலை அருகில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு உடைந்துள்ளது. இதனால் ருத்ராவதி பேரூராட்சி மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 24 ஊராட்சிகளுக்கு கடந்த 3 நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி, போலீசாா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உடைந்த குழாய் உடனடியாக சரி செய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT