திருப்பூர்

இளைஞா் கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

குன்னத்தூா் அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா்- பெருந்துறை சாலை தேவம்பாளையம் அருகே உள்ள குளப்பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஆகாஷ் (24) என்பவா் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.

இதையடுத்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் அஜித் (25), தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த காா்த்தி (26) ஆகியோரைக் கைது செய்தனா். இருவரும் கோவை மத்திய சிறையில் தண்டனையில் உள்ள நிலையில், ஆட்சியா் உத்தரவின்படி, இருவரும் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT