திருப்பூர்

மகளிா் சக்தி விருது: அக்டோபா் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மகளிா் சக்தி விருதுக்கு தகுதிவாய்ந்த பெண்கள், குழுக்கள் வரும் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மகளிா் விருதுக்கு தகுதிவாய்ந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவன்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்தல், சட்டஉதவி, விழிப்புணா்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்தல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிா் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தனிநபா்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த விருதுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT