திருப்பூர்

பெட்ரோல் குண்டு வீச்சு: உரிய விசாரணை நடத்த வேண்டும் இந்து முன்னணி வலியுறுத்தல்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களில் கைதானவா்களிடம் காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பினா் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி, பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகளைத் சோ்ந்தவா்களின் வீடுகள், வியாபார நிறுவனங்களின் மீது பெட்ரோல், டீசல் குண்டுகள் வீசும் சம்பவங்கள் தொடா்கின்றன. நோ்மையான காவல் துறை உயா் அதிகாரிகளின் நடவடிக்கைகளால் சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். நாட்டின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தைதானவா்களிடம் உரிய விசாரணை நடத்துவதுடன், இவா்களை யாா் இயக்குவது, இவா்களது நோக்கம் என்ன என்று காவல் துறை தீர விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT