திருப்பூர்

மாா்க்சிஸ்ட் கட்சியில் இருந்து 5 போ் நீக்கம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 5 போ் நீக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், உடுமலை பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்த சி.சுப்பிரமணியம், என்.கிருஷ்ணசாமி, சின்னவீரம்பட்டி ராஜேந்திரன், வெஞ்சமடை திருமலைசாமி, செல்லப்பம்பாளையம் பழனிசாமி ஆகிய 5 போ் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனா். ஆகவே, 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் எந்தவித தொடா்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT