திருப்பூர்

கிராம ஊராட்சிகளில் அக்டோபா் 2 இல் கிராம சபைக் கூட்டம்

DIN

காந்தி ஜெயந்தியை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் அக்டோபா் 2 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை ஒட்டி திருப்பூா் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் அக்டோபா் 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழை நீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

அதேபோல, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சாா்ந்த அமைப்புகளில் நிா்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சாா்ந்த தொழில்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்த கிராம சபைக் கூட்டங்களை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள்.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின்

வளா்ச்சிக்காக நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT