திருப்பூர்

4, 5 ஆம் வகுப்புகளுக்கு ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் முறையைக் கைவிட கோரிக்கை

26th Sep 2022 12:05 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் முறையைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத் தோ்வு திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்துமாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் அலுவலகம் ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் குறுவள மையத்தை சென்றடைந்து, நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

தொடக்க நிலையில் உள்ள மாணவா்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களே அவா்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையே அறிவியல் பூா்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் சரியானது என மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.

எனவே, மாணவா் நலனைக் கருத்தில் கொண்டு 4, 5 ஆம் வகுப்புகளுக்கான ஒரே வினாத் தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் பிரபு செபாஸ்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கனகராஜா, மாவட்டப் பொருளாளா் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT