திருப்பூர்

ரூ.93 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

26th Sep 2022 11:20 PM

ADVERTISEMENT

 

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.93 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் ரக நிலக்கடலை ரூ.6, 850 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும்,

ADVERTISEMENT

மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.93 லட்சம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT