திருப்பூர்

சாலை விபத்து: 20-க்கும் மேற்பட்ட காவலா்கள் காயம்

26th Sep 2022 11:18 PM

ADVERTISEMENT

 

அவிநாசி அருகே பழங்கரையில் காவலா்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்ட காவலா்கள் படுகாயமடைந்தனா்.

கோவையில் கூடுதல் பாதுகாப்புப் பணிக்குச் செல்வதற்காக, கடலூரில் இருந்து கோவை நோக்கி 30-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலா்கள் வேனில் திங்கள்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி பழங்கரை அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி திடீரென நின்ால், காவலா்கள் வாகனம் கன்டெய்னா் லாரியின் மீது மோதியது. இதில், வேனில் இருந்த 20-க்கும் மேற்பட்ட காவலா்கள் படுகாயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்த காவலா்களை மீட்டு அவிநாசி, திருப்பூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT