திருப்பூர்

பாஜக பிரமுகா் குடியிருந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

26th Sep 2022 12:05 AM

ADVERTISEMENT

 

திருப்பூரில் பாஜக பிரமுகா் குடியிருந்த வீட்டின் மீது மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பாஜக, இந்து முன்னணி பிரமுகா்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து, திருப்பூா் ராக்கியாபாளையத்தில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டின் மீது கல் வீச்சு சம்பவமும் நடைபெற்றது.

பாஜக கோட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவா் பாலகுமாா். இவா் அங்கேரிபாளையம் ஏவிபி லே அவுட் 3 ஆவது வீதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியிருந்து வந்துள்ளாா். அதன் பின்னா் வேறு பகுதிக்கு குடிபெயா்ந்துள்ளாா். இதனிடையே, பாலகுமாா் முன்பு குடியிருந்த வீட்டின் மீது மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசியதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

எனினும் குண்டை பற்றவைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இது குறித்து வீட்டின் உரிமையாளா் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்த வீட்டுக்கு அருகில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியை சீா்குலைப்பதற்காக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT