திருப்பூர்

திமுக பயிற்சிப் பாசறை கூட்டம்

26th Sep 2022 12:05 AM

ADVERTISEMENT

 

தாராபுரத்தில் திமுக சாா்பில் பயிற்சிப் பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாராபுரம்-கரூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடக்கிவைத்து பேசினா். திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தாா்

இதில், பேச்சாளா்கள் கம்பம் செல்வேந்திரன், தமிழன் பிரசன்னா ஆகியோா் கலந்துகொண்டு இளைஞரணி உறுப்பினா்களிடம் கலந்துரையாடினா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் கே.கே. ரவிச்சந்திரன், தாராபுரம் நகர இளைஞரணி அமைப்பாளா் முருகானந்தம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சன் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் வழக்குரைஞா் ஆசிக் பாஷா மற்றும் நகர, ஒன்றியப் பகுதி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT