வெள்ளக்கோவில் அருகே உணவகத்தில் புகுந்து சிலிண்டரை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஓலப்பாளையம் - காங்கயம் சாலை எல்லக்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் ஆத்தாயி (65). இவா் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், அருகில் உள்ள கடைக்கு ஆத்தாயி சனிக்கிழமை சென்ற நிலையில், திறந்திருந்த உணவகத்தில் புகுந்த நபா் சிலிண்டரை தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஆத்தாயி புகாா் அளித்தாா். இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.