திருப்பூர்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பொது மருத்துவ முகாம்

26th Sep 2022 12:06 AM

ADVERTISEMENT

 

சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங்கின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் குமரானந்தபுரத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கிளை துணைத் தலைவா் எஸ்.ராஜேஷ் தலைமை வகித்தாா். இதில், குமரன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் செந்தில்குமரன் தலைமையில், பொது மருத்துவா்கள் பாக்யராஜ், குமாரசாமி உள்ளிட்ட 4 மருத்துவா்கள் பங்கேற்று முகாமில் பங்கேற்றவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.அருள், மாவட்டச் செயலாளா் செ.மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT