திருப்பூர்

சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

25th Sep 2022 12:50 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவிலில் மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கிவைத்து விற்ற 2 போ் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அா்ஜுனன் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுவை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துகொண்டிருந்த, தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வேட்டுவக்கோட்டையைச் சோ்ந்த கமலரசனை (28) கைதுசெய்தாா்.

இதேபோல, ஓலப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை அருகே மது விற்ற ஒரத்தநாடு வீரபாண்டி ராஜகோபாலும் (56) கைதுசெய்யப்பட்டாா். இவா்களிடம் இருந்து 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT