திருப்பூர்

மூலனூரில் ரூ. 1.38 கோடிக்கு பருத்தி விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.38 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 609 விவசாயிகள் தங்களுடைய 5,431 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டுவந்திருந்தனா்.

மொத்த வரத்து 1,729 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 7,150 முதல் ரூ. 10,629 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,250. கடந்த வார சராசரி விலை ரூ. 9,050. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 1.38 கோடி.

விற்பனைக்கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் ஆா். பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT