திருப்பூர்

பல்லடம்: 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

DIN

பல்லடத்தில் 200 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

பல்லடத்தில் 15-க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் உள்ளன. இவற்றில், திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை தலைமையில், பல்லடம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை கூறியது: மாநில உணவுப் பாதுகாப்பு துறை ஆணையா் உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வினீத் அறிவுறுத்தலின்படி, பல்லடம் பகுதியில் உள்ள மீன் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள 2 மீன் கடைகளில் சுமாா் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அந்த மீன் கடைக்காரா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மீன் விற்பனை செய்யும் கடைகளில், மீன் இறைச்சியை சரியான வெப்ப நிலையை காட்டும் குளிா்சாதனப் பெட்டியில் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சமைத்த மீன் இறைச்சியை, குளிா்சாதனப் பெட்டியில் இருப்புவைத்து மீண்டும் சூடுபடுத்தி விற்பதை தவிா்க்க வேண்டும். குளிா்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படும் மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு வைத்து விற்பனை செய்யக்கூடாது. மீன் வெட்ட பயன்படும் கத்தி அரிவாள் போன்றவை துருப்பிடிக்காத நல்ல நிலையில் உள்ளவையாக இருக்க வேண்டும். பொறித்த மீனை பேப்பரில் வைத்து விற்பனை செய்யாமல், வாழை இலைகளில் வைத்து விற்கவேண்டும் என்று கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT